• Sep 20 2024

ஜோசப் சஞ்சய் இயக்கும் படத்திற்கு லாக்கான ஸ்க்ரிப்ட்..! ஆரம்பமே சிக்ஸர் தானா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மட்டும் இன்றி அரசியல் பயணத்திலும் பிரபலமாக உள்ள நடிகர் தான் இளைய தளபதி விஜய். இவர் இன்னும் இரண்டு படங்களோடு சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும், அதன் பின் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அதிகார பூர்வமாக அறிவித்திருந்தார். 

இவ்வாறு இருக்கையில், தற்போது விஜய்யின் மகனான சஞ்சய்  அப்பாவைப்போல் அல்லாமல் வேறு பரிமாணத்தில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இவர் இயக்கும் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த திரைப்படத்தின் நடிகர், நடிகை , கதை என எந்த தகவலும் இதுவரையில் லைக்கா நிறுவனம் வெளியிடவில்லை. 


ஆனாலும் இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் அவர்களின் மகன் துருவ்  விக்ரம் நடிப்பதாக போலித் தகவல்கள் பரவி வந்திருந்தது . அதன்பின் "டாடா" படத்தில் நடித்த கவின் ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்புள்ளது எனவும்  கூறப்பட்டது.


இந்த நிலையில், ஜோசப் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ள  இப்படத்தின் கதை, கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

எனவே பொறுத்து இருந்து பார்ப்போம். ஜோசப் சஞ்சய்  இயக்கும் படம் எப்படி உருவாக போகிறது, ஹீரோ, ஹீரோயின் யார் என்ன என்பதை...

 

Advertisement

Advertisement