• Nov 19 2024

நடிப்பதை திடீரென நிறுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்-வனிதா தான் காரணமா..? நடந்தது என்ன..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென்று அங்கீகாரத்தை கொடுத்தது தான் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி.

ஆனாலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இவர் இயக்கத்தில் இதுவரை ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இதில் குறிப்பாக அவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்தது.

இவ்வாறுஇருக்கையில்  எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் சமூக பிரச்சனை குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைக்கும் பதிவு போட்டு வருவார். இதனால் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி தவிப்பார்.

இருப்பினும் தற்போது சில வருடங்களாக லட்சுமி ராமகிருஷ்ணன் எந்த படங்களிலும் நடிப்பது இல்லை. எனினும் அதற்கான காரணத்தை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

வனிதா பீட்டர் பால் திருமணம் சர்ச்சையான போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சில கருத்துக்கள் கூறி இருந்தார். அப்போது ஒரு youtube சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணணின் லைவ் பேட்டியில் இடையில் வந்த வனிதா மிகவும் மரியாதை குறைவாக அவரை திட்டிவிட்டார்.

"அதை தற்போது நினைத்தாலும் அருவருப்பாக இருக்கிறது, ஏண்டா நடிக்க வந்தோம் என இருந்தது" என கூறிய லட்சுமி, அதற்கு பிறகு தான் படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என ஷதெரிவித்து இருக்கிறார்.

Advertisement

Advertisement