விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'பாரதி கண்ணம்மா'. இந்த சீரியலானது விறுவிறுப்பிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்தவகையில் தற்போது இந்த வாரத்திற்குரிய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
அதில் கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி "இன்னைக்கு வீக் என்ட், அதனால குழந்தைகளை வெளியே கூட்டிற்றுப் போக வந்தேன்" எனக் கூறுகின்றார். அதற்கு கண்ணம்மா அவங்க உங்க கூட வர விருப்பப்பட மாட்டாங்க எனப் பதிலளிக்கின்றார்.
அதற்கு உடனே பாரதி "அதை நீ சொல்லக் கூடாது குழந்தைங்க தான் சொல்லணும்" என்கின்றார். இதனைக் கேட்டதும் ஹேமா "நான் எல்லாம் உங்க கூட வர மாட்டேன்" எனக் கூறுகின்றார். பின்பு பாரதி "லட்சுமி சொல்றதையும் நான் தெரிஞ்சுக்கலாமா" என்கின்றார். அதற்கு கண்ணம்மா அவளும் வர மாட்டாள் நீங்க போகலாம் என்கின்றார்.
ஆனால் லட்சுமியோ யார் பேச்சையும் கேட்காமல் பாரதியுடன் போகத் தயாராகின்றார். இவ்வாறாக இந்த வாரத்திற்குரிய ப்ரோமோ வெளிவந்து இருக்கின்றது.
Listen News!