இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் இலங்கையில் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த கவினுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே சிலகாலம் கவினுடன் பேசாமல் இருந்துவந்தார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா தற்பொழுது தன்னுடன் பிக்பாஸ் வீட்டிலிருந்த தர்ஷனின் பிறந்தநாளை அவருடன் இணைந்து கொண்டாயுள்ளார். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!