நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தை தயாரிப்பதற்காக அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்து போட்டதாக லதா ரஜினிகாந்த் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், லதா ரஜினிகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில் இது குறித்து லதா ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அதாவது,கோச்சடையான் படத்திற்கு கொடுக்க வேண்டிய காசு எல்லாம் எப்பவோ கொடுத்து செட்டில் பண்ணியாச்சு,என் பொண்ணுக்காக சர்ப்போட் பண்ணினேன். கோச்சடையான் படம் ரிலீஸான போதே எல்லாம் கொடுத்து செட்டில் பண்ணியாச்சு, அநியாயத்திற்கு எப்பவும் துணை போகக் கூடாது. இந்த விஷயம் ரஜினி சேருக்கும் தெரியும்.
அவரை கேட்டிட்டு தான் உங்களுக்கு விளக்கம் தருகின்றேன். நான் முகத்தை மூடிட்டு எல்லாம் கோட்டுக்கு போகல,வெய்யில் அதனால தான் தலைல துப்பட்டா போட்டிட்டு போனேன் மற்றும் படி எந்த குழப்பமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
Listen News!