விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடத்தி முடித்த படக்குழு தற்போது அடுத்தகட்ட ஷூட்டிங்கை காஷ்மீரில் நடத்தி வருகின்றனர். இதற்காக தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு பறந்த படக்குழு, அங்கு முழுவீச்சில் ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் படப்பிடிப்பை அங்கு நடத்திவிட்டு இந்த மாத இறுதியில் மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளனர்.இந்த நிலையில் லியோ ஷீட்டிங்கில் நடிகர் விஜய் சஞ்சய்த்துடன் நிறகும் புதிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.
1 Word About @Actorvijay 's #Leo Look🥵pic.twitter.com/WlLDtujL2A
Listen News!