தமிழ் சினிமாவில் சிறுசிறு கதாப்பத்திரங்களில் நடித்து தற்பொழுது காமெடி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் தான் நடிகர் யோகிபாபு. இவர் விஜய் அஜித் ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இது தவிர சோலோ ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் இவர் நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படமானது அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஸ்ரீமதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் போராட்டம் தான் இந்த படத்தின் கதை. பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் உள்ள மலை கிராமங்களில் நடைபெற்றுள்ளது.
படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்றுள்ளதை அடுத்து சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கமல் சார் மாதிரி பேசுங்க- மித்திரன் சொன்ன வார்த்தையைக் கேட்டு கடுப்பான கார்த்தி
- நாளைய தினம் தாயகம் திரும்பவுள்ள டி .ராஜேந்தர்-விமான நிலையத்தில் வரவேற்கப் போவது யார் தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!