• Sep 21 2024

பிசாசு 2 படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்து வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் மிஷ்கின். இவரது இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான்  ‘பிசாசு 2. இந்தப்படத்தின் படப்பிடிப்பானது  முடிவடைந்துள்ளதோடு விரைவில் ரிலீஸ் ஆகவும் காத்திருக்கின்றது.

இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பிசாசு 2படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலான நெஞ்சை கேளு என்ற பாடல் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .


இந்த படத்திற்கு இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா இசையமைத்து உள்ளார். அத்தோடு இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது .

மேலும் இந்த படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement