• Sep 21 2024

பலருடன் லிவிங்கில் இருந்த லாரன்ஸ் பட நடிகை.. அட இவங்களா இப்படி.. நம்பவே முடியல..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாத் திரையுலகின் பிரபல பெண் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தற்போது தமிழில் லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் வல்லவராகவும் இருந்து வருகின்றார்.


இவ்வாறு வேறுபட்ட பல கதாபாத்திரங்களில் நடித்துத் தான் மக்கள் மனதில் தனக்கென நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார். கங்கனா சினிமாவில் பேரும் புகழும் பெற்ற ஒரு நடிகையாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் தொடர்ந்து மாட்டிக் கொள்வது வழக்கமான ஒன்று.


அந்தவகையில் இவர் கிட்டத்தட்ட 5 நடிகர்ளுடன் லிவிங் டு கெதரில் இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. அத்தோடு கங்கனா பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருடன் மூன்று வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார். இருப்பினும் பின்பு அந்த தயாரிப்பாளர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் ஒன்றினையும் அளித்தார்.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இவர், இளம் நடிகர் ஒருவரை காதலித்து அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். ஆனால் அதுவும் அதிக நாட்கள் நிலைக்கவில்லை.

இதன் பின்னர் நடிகர் அஜய் தேவனுடன் லிவிங்கில் இருந்த கங்கனா ஒரு சில காரணங்களால் இவரையும் பிரிந்து சென்றார். இதற்கு அடுத்த படியாக மருத்துவர் ஒருவருடன் கங்கனா தனிமையில் இருப்பதாக பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தமை குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து கங்கனா பிரபல நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் உடனும் லிவிங் இல் இருந்தார் என்று ஒரு தகவல் முன்பு வெளியானது. இந்த காரணத்தால் தான் ஹ்ரித்திக் ரோஷனுக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ஆனது எனவும் கூறப்பட்டது.


இந்நிலையில் தற்போது கங்கனா ஆறாவதாக வேறொரு நபரை காதலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியானது. ஆனால் அந்த நபர் யார் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement