'குக்கூ, ஜோக்கர்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தற்போது 'ஜப்பான்' என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்திற்கான பணிகள் யாவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் உண்மை சம்பவத்தை எடுத்துக்கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக ஜப்பான் திரைப்படத்தை ராஜூ முருகன் எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதுவும் திருச்சியில் நடந்த ஒரு சம்பவத்தை கதையின் அடிநாதமாக்கி இருக்கின்றார்.
இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆனது ஜூன் மூன்றாம் தேதி தொடங்குகிறது. அதுமட்டுமல்லாது அந்த படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறும் என்றும், அத்துடன் படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் முடிவடையும் எனவும் பட குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மற்றுமோர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவித்திருக்கின்றனர். இதேபோன்று கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று சர்தார் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்திருந்தது. இதனால் இப்படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தீபாவளி தினத்தன்று கார்த்தியின் ஜப்பான் படத்திற்குப் போட்டியாக சிவகார்த்திகேயனின் 'அயலான்' மற்றும் லாரன்ஸின் 'ஜிகர்தண்டா-2' ஆகிய படங்களும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!