தன்னுடைய அயராத உழைப்பால் நடிகர், நடன இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ராகவா லாரன்ஸ். சிறுவயது முதலே நடனத்தின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
மேலும் இவர் தற்போது தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் 'ருத்ரன்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து 'ஜிகர்தண்டா 2' படத்திலும் நடித்து வருகின்றார். இதில் ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்னவெனில் கார்த்திக் சுப்புராயன் இப்படத்தினுடைய 70 சதவீதம் படப்பிடிப்பினை முடித்து விட்டாராம். இது எப்படி சாத்தியமெனில், லாரன்ஸ் ட்ரைக்டர் என்ன சொல்லுகிறாரோ அதனை அப்படியே பண்ணிட்டு போய்டுகிறாராம். இதனால் தான் இந்தப் படத்தினுடைய படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.
Listen News!