ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது ருத்ரன். இந்தப் படம் லாரன்சின் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
படம் வழக்கமான பழிவாங்கும் படமாகவே வெளியாகியுள்ளது. தன்னுடைய தந்தை மற்றும் தாயின் மரணத்திற்கு காரணமாக வில்லன் சரத்குமார், தன்னுடைய மனைவியையும் கடத்த, அவரை மீட்கும் ஹீரோவாக நடிகர் லாரன்ஸ் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
.படம் முதல் நாளிலேயே சிறப்பான வசூலை பெற்றுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிகமான வசூலை எட்டிய, வாரிசு, துணிவு படங்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தை ருத்ரன் படம் பிடித்துள்ளது. சிறப்பான ஓபனிங் அமைந்துள்ள நிலையில், படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து கோயம்புத்தூரில் திரையரங்கம் ஒன்றில் பார்த்துள்ளார் நடிகர் லாரன்ஸ். இதையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த லாரன்ஸ், 3 ஆண்டுகள் கழித்து தன்னுடைய படம் வெளியான நிலையிலும், தன்னை மறக்காமல் தன்னுடைய படத்திற்கு சிறப்பான ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். எந்தப் படமாக இருந்தாலும் டான்ஸ், ஆக்ஷனை தாண்டி படத்தில் மெசேஜ் இருப்பது முக்கியம் என்று கூறியுள்ள அவர், இந்தப் படத்தை பார்த்த பலர், வெளிநாடுகளில் இருந்து தனக்கும் தன்னுடைய ட்ரஸ்டுக்கும் போன் செய்வதாகவும், தன்னுடைய தாய்க்கு போன் செய்து பேசியதாக தெரிவித்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
செல்போனுடன் நேரத்தை செலவழிப்பதை காட்டிலும் தன்னுடைய பெற்றோருடன் நேரம் செவழிப்பது முக்கியம் என்பது இந்தப் படத்தின் மூலம் பலருக்கும் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் படம் பேமிலி ஆடியன்சை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளதாகவும் லாரன்ஸ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் அவர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். க்ளைமாக்சில் வரும் பகை முடி பாடல் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதையும் அவர் கூறினார்.
Listen News!