• Sep 20 2024

முதன் முறையாக நடிகராக களமிறங்கும் லாரன்ஸின் தம்பி-யாருடைய இயக்கத்தில் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ்.இவர் தற்போது ருத்ரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அண்மையில் வெளியானது. அதாவது கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் ருத்ரன் படம் வெளியாக உள்ளது என கூறப்படுகின்றது.இப்படம் லாரன்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.மேலும் இப்படத்தை பி வாசு இயக்கயுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. இதில் அனுஷ்கா, வடிவேலு ஆகியோர் நடிக்கவுள்ளனர் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ரஜினி நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைத்தது. எனினும் தற்போது லாரன்ஸின் மற்றொரு படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டாரின் ஆஸ்தான இயக்குநரான கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க உள்ளார். ரஜினிகாந்துக்கு முத்து, படையப்பா என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த உடன் மட்டுமல்லாமல் தற்போது ரஜினி நடிக்கவுள்ள ஜெயிலர் படத்திலும் கேஎஸ் ரவிக்குமார் பணியாற்ற உள்ளார்.

மேலும் சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கேஎஸ் ரவிக்குமார் மீண்டும் படங்களை இயக்க முடிவெடுத்துள்ளார். எனினும் தற்போது உருவாகவுள்ள படத்தில் லாரன்ஸின் தம்பி எல்வின் அவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுவரை எல்வின் தனது அண்ணன் லாரன்சுடன் சில பாடல்களில் நடனம் ஆடி உள்ளார்.

ஆனால் முதல்முறையாக இப்படத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கயுள்ளது. மேலும் காமெடி, ஆக்சன் என இரண்டும் கலந்த மாசான படமாக இப்படம் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement