• Sep 20 2024

தலைவர் 171 திரைப்பட ஷுட்டிங் ஆரம்பம்- வெளியாகியது அறிவிப்பு .மகிழ்ச்சியில் ரசிகர்கள்

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

அண்மையில் வெளியான 'ஜெயிலர்  வெற்றியை பெற்றது. இந்தப்படத்திற்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது. ரஜினி இதனையடுத்து த.செ. ஞானவேல் இயக்கத்தில் புதிய தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி அதற்கான  படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கின்றது.


இந்நிலையில் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 'ஜெயிலர்' படத்தினுடைய பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனமே ரஜினி, லோகேஷ் கனகராஜ் இணையும் 'தலைவர் 171' படத்தை தயாரிக்க இருக்கிறது. கமலை வைத்து 'விக்ரம்' என்ற பிரம்மாண்ட ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ரஜினியை இயக்கவுள்ளது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.


இந்நிலையில் 'தலைவர் 171' படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஷுட்டிங்கை அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் துவங்கி செப்டம்பருக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். இதனால் அடுத்த தீபாவளிக்கு 'தலைவர் 171' படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள் அடுத்தாண்டு தீபாவளி தலைவருக்கானது என்று உச்சக்கட்ட எதிர்பார்ப்புடன் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement