• Sep 20 2024

விக்ரம் பட வெற்றிக்கு வாழ்த்து கூறிய முன்னணி நடிகர்கள்-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான திரைப்படம் தான் விக்ரம். இந்த படம் வெளியான நாள் முதல் வசூலுக்கு எந்த குறையும் இல்லை, பல இடங்களில் இதுவரை சாதனை லிஸ்டில் இருந்த படங்களின் வசூலை கூட விக்ரம் முறியடித்து வருகிறது.

மேலும் இப் படம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்த படமாக அமைய அவர்கள் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு வெகுமதி பரிசுகளை வழங்கினார்.

அதன்பிறகு படத்தில் ஸ்பெஷல் ரோலில் நடித்த சூர்யாவிற்கு ஒரு வாட்ச் கொடுத்தார்கள்.

நேற்று நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஹைதராபாத் சென்றிருந்தார். அப்போது அவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவினின் வீட்டிற்கு செல்ல கமல்ஹாசனுக்கு விக்ரம் பட வெற்றி கொண்டாட்டம் நடந்துள்ளது.

மேலும் சிரஞ்சீவி பட வெற்றிக்காக கமல்ஹாசனை மனதார பாராட்டியுள்ளார். அவர்களுடன் விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இருந்துள்ளனர்.

இதோ சிரஞ்சீவியே வெளியிட்ட புகைப்படங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement