• Sep 20 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை படித்தவர் தான் இயக்குநர் வெற்றிமாறன்.

மேலும் இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்துள்ளது.

அதன்படி கடைசியாக அவரின் இயக்கத்தில் வெளியான தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படமும் தேசிய விருதுகளை பெற்றது.

இதனிடையே தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். மேலும் அப்படத்தை முடித்தபின் வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் அடுத்து பிரம்மாண்ட வெற்றி பட நடிகருடன் கூட்டணியமைக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆம், அதன்படி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் NTR-யை இயக்கவுள்ளராம் வெற்றிமாறன்.

ஜூனியர் NTR அவரின் NTR31 திரைப்படத்தை முடித்த பின் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பார் என்றும் இப்படத்தை முடித்தபின்பே வெற்றிமாறன் - விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement