• Nov 19 2024

“என் மேல சாய்ஞ்சிட்டாரு” மயில்சாமியின் இறுதி நொடியை நேரில் பார்த்த மகனின் மனதை உருக்கும் பேட்டி!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மயில்சாமி சில நாட்களுக்கு முன்   அதிகாலை மாரடைப்பால் காலமானார்.பின்னர் அஞ்சலிக்கு பிறகு இவரின் உடல் வடபழனி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 57 வயதான நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். மெமிக்ரி கலைஞராகவும் புகழ் பெற்றவர்.

நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் (அன்பு, யுவன்) உள்ளனர். மூத்த மகன் அன்பு (அருமை நாயகம்) 'அல்டி' என்ற படத்தில் நடித்தவர்.  கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்திலும் அன்பு நடித்திருந்தார்.

இளைய மகன் யுவன், பா. ரஞ்சித் தயாரிப்பில் தண்டகாரண்யம் எனும் படத்தில் நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'என்று தணியும்', சத்யராஜ் நடித்த 'தீர்ப்புகள் விற்கப்படும்' படங்களில் யுவன் மயில்சாமி நடித்துள்ளார்.

இந்நிலையில் மூத்த மகன் அன்பு,பேட்டி ஒன்றில் தனது  அப்பா மயில்சாமி மரணம் அடைந்த அன்று நடந்த சம்பவங்கள் குறித்து யு பேசியுள்ளார் அப்பாவின் இறப்ப பற்றி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சேனல்களில் வேறு விதமாக சொல்கிறார்கள் பார்க்கும் போது ரொம்ப மன வருத்தமாக இருக்கிறது  .நான் அவருடன் கூட இருந்திருக்கன் .என்ன நடந்தது என்று சொல்லுறன். சிவராத்திரி அன்று வேறொரு படத்துக்கு டப்பிங் பணிகளை மேற்கொள்ள ஸ்டூடியோ சென்றார். பின்னர் மாலை மேகநாதீஸ்வர் சிவன் கோயிலுக்கு சென்று சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டோம்.

அங்கு ட்ரம்ஸ் சிவமணி  இசை நிகழ்ச்சி போய்கிட்டு இருந்துச்சு அதைப்பார்த்து ஜாலியா சந்தோசமா இருந்தாரு . இதெல்லாம் முடிய. பின்னர் வீட்டுக்கு கிளம்பினோம் .வீட்டுக்கு போகும்போது சந்தோசமா பேசிகிட்டே போனோம்.

வீட்டுக்கு போனா அப்புறம் என்னிடம் பசிக்குதுப்பா எதுவும் சாப்பிடுவோமா என்று கேட்டார் .நானும் ஆமா சாப்பிடலாம் என்று சொல்லிட்டு ,நான் ,அம்மா ,அப்பா மூணு பேரும் சாப்பிட்டம்,அப்புறம் நியூஸ் பாத்துட்டு இருந்தாரு.  சாப்பிட்டு பத்து நிமிடங்களுக்கு பின்னர் சாப்பிட்டது நெஞ்சிலே நிக்கிற மாதிரி இருக்குது எண்டாரு ,நான் ஹாட் வாட்டர் குடிக்க கொடுத்தேன். அதற்குப் பிறகு மூச்சு விட கஷ்டமா இருக்குது என்று சொன்னாரு, வாங்கப்பா ஹாஸ்பிடல் போகலாம் என்று சொல்லி பக்கத்தில் இருக்கிற தனியார் ஹாஸ்பிட்டல் ஒன்றுக்கு நான் காரில் ஏத்திக் கொண்டு போனேன்.தெரு முக்கை தாண்டும் போது என் மேல சாஞ்சிட்டாரு .எனக்கு என்ன சேர்ந்து தெரியல.

காரை விட்டு விட்டு ஆட்டோவில் கூட்டிட்டு போய் காஸ்பிட்டலில் விட்டேன். டாக்டர்ஸ் பாத்துட்டு ஆல்ரெடி உங்க அப்பா இறந்துட்டாரு அப்படின்னு சொன்னாங்க.என  உருக்கமா கூறினார்.

Advertisement

Advertisement