சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அருள் சரவணன் ’லெஜன்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக ஓடிடியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.
சுமார் 80 கோடி ரூபாய் செலவில் இந்த படம் உருவாக்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் சரவணன் அவர்களுக்கு ஒரு சில கோடிகள் நஷ்டம் என்றாலும் இந்த படம் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் ’எதிர்நீச்சல்’ ’கொடி’ போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தான் இயக்குனர் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இன்று சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் டெஸ்ட் ஷூட் படமாக்கப்பட இருப்பதாகவும் இதில் சரவணனுக்கு சில கெட்டப்புகள் மேக்கப் போட்டு ஸ்டில்ஸ் எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கும் என்றும் பூஜையை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அதுமட்டுமின்றி லெஜண்ட் சரவணன் ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் த்ரிஷா மற்றும் இன்னொரு பிரபல நடிகை ஆகிய இருவரும் இந்த படத்தின் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் படம் போலவே இந்த படமும் மிகப்பெரிய பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Listen News!