• Sep 20 2024

டுவிட்டரில் என்ட்ரி கொடுத்த லெஜண்ட் சரவணன்-ஒரே நாளில் இத்தனை ஃபாலோவர்ஸா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி லெஜண்ட் .ஆரம்பத்தில் விளம்பரங்களில் டாப் ஹீரோயின்களுடன் நடித்து வந்த இவர் கதாநாயகனாக நடித்துள்ளதால் இப்படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகமாகக் காணப்படுகின்றது.

மேலும் இப்படம் ஜுலை 28 ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடந்துள்ளது. பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் 2500 க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட ரிலீசை முன்னிட்டு அண்ணாச்சி, சோஷியல் மீடியாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.நேற்று முதல் போஸ்டே, டைரக்டர் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைக்கப்பட்டுள்ள சரவணன் சரவெடி பாடலுடனான தி லெஜண்ட் படத்தின் டிரைலர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரஜினி, விஜய் படங்ளை மிஞ்சும் அளவிற்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த வீடியோவுடன், சோஷியல் மீடியா வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. டைரக்டர் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைக்கப்பட்டுள்ள சரவெடி உடனான எனது தி லெஜண்ட் படத்தின் டிரைலரை வழங்குகிறேன். தி லெஜண்ட் படம் 2500 க்கும் அதிகமான தியேட்டர்களில் ஜுலை 28 ம் தேதி ரிலீசாக உள்ளது என ட்வீட் போட்டுள்ளார்.

இதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த மற்றொரு விஷயம் என்ன தெரியுமா? அண்ணாச்சி டுவிட்டரில் இணைந்த 24 மணி நேரத்திற்குள் அவரை கிட்டதட்ட 16,000 பேர் பின் தொடர்கிறார்கள். ஆனால் நம்ம அண்ணாச்சி இதுவரை யாரையும் பின்தொடரவில்லை. ஒரே நாளில் 15,000 க்கும் அதிகமான ஃபாலோவர்களா என அனைவரும் வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள். அண்ணாச்சியின் முதல் ட்வீட்டிக்கே லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement