சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளரான சரவணன் அருள், அந்தக் கடையின் விளம்பரங்களில் ஆரம்பத்தில் நடித்தார். இந்த விளம்பரங்கள் நெகட்டிவ் விளம்பரத்தை கொடுத்தது. ஆயினும் முன்னணி நடிகைகளுடன்இணைந்து தான் அவர் இந்த விளம்பரங்களில் நடித்திருந்தார்.
இதையடுத்து தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படமானது கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் வசூல் சாதனை புரிந்தது. மேலும் இப்படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையை தேர்ந்தெடுக்கும் பணியில் தற்போது சரவணன் அருள் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, தன்னுடைய அறிமுகப் படத்தில் இருந்த தன்னுடைய கெட்டப்பை மாற்றி தற்போது அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து இளமையில் ஜொலிக்கும் அந்த அழகான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் சரவணன் அருள்.
இவ்வாறாக அன்றும் இன்றும் என்றும் இளைஞன் போல் ஜொலிக்கும் லெஜண்ட்ற்கு வயது 30- 45 இற்குள் தான் இருக்கும் என பலரும் நினைத்து வருகின்றனரான. ஆனால் தற்போது அவருக்கு 53 வயது ஆகிறது. அதுமட்டுமல்லாது திருமண வயதிலும் இவருக்கு ஒரு பெண் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
லெஜண்ட் சரவணனின் உண்மையான வயதினை அறிந்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.
Listen News!