தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநரான பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் சந்திரமுகி. இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்திலும் இவருடன் இணைந்து பிரபு நாசர் ஜோதிகா நயன்தாரா வடிவேலு எனப் பலர் நடித்திருந்தனர்.
பேய்ப்படமாக வெளியாகியிருந்த இப்படமானது அந்த காலத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இதன்பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார் என்று பல தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில், இதை உறுதி செய்யும் விதமாக சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை லைகா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது .
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகிறது. எம்.எம். கீரவாணி இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கேரளாவில் வசூல் மழையில் ஆட்டம் போடும் விக்ரம் திரைப்படம்- சந்தோஷத்தில் படக்குழுவினர்
- அஜித்தைப் போலவே சிவகார்த்திகேயனையும் அழிக்க நினைத்தார்கள்- பிரபல நடிகரின் பகீர் தகவல்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!