• Sep 21 2024

சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநரான பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் சந்திரமுகி. இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்திலும் இவருடன் இணைந்து பிரபு நாசர் ஜோதிகா நயன்தாரா வடிவேலு எனப் பலர் நடித்திருந்தனர்.

பேய்ப்படமாக வெளியாகியிருந்த இப்படமானது அந்த காலத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இதன்பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார் என்று பல தகவல்கள் வெளிவந்தது.

https://twitter.com/LycaProductions/status/1536687443398623232

இந்நிலையில், இதை உறுதி செய்யும் விதமாக சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை லைகா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது .

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகிறது. எம்.எம். கீரவாணி இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement