துணிவு படம் வெளியானதும் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது . ஆனால், கடைசி நேரத்தின் விக்னேஷ் சிவனின் கதை அஜித்துக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிடிக்காததால், அவரை ஏகே 62 படத்தில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, மகிழ்திருமேனியுடன் இணைந்துள்ளனர்.
அஜித் 62 படம் குறித்த அப்டேட் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், படத்திற்கான பூஜை சத்தமே இல்லாமல் நடந்து முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அஜித் 62 திரைப்படம் குறித்த அனைத்தையும் படக்குழு மிகவும் சீக்ரெட்டாக வைத்துள்ளது. துணிவு படத்திற்கு கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் அஜித், அதற்காக ஏகே62 இயக்குநரை படாத பாடு படுத்தி வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அஜித்தின் 62 திரைப்படம் கொரியன் படத்தின் ரீமேக் என்ற தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருவது குறித்து விளக்கம் அளித்துள்ள பிஸ்மி, அஜித் 62 படம் கொரியன் படத்தின் ரீமேக்காக இருப்பதற்கான ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால், அது இப்போது மாறிவிட்டது. மகிழ் திருமேனி ஒரு கதையை சொல்லி அது அஜித்திற்கு பிடித்துப்போனதால் தான் படவாய்ப்பே அவருக்கு சென்றது.
இதற்காக அவர் கதை எழுத தொடங்கும் போது தாமதமானதால்,வேறு ஒரு படத்தை பண்ணலாம் என்று முடிவு செய்து கொரியன் படத்தின் உரிமையை வாங்கி அதற்கான ஸ்கிப்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். ஆனால், அதிலும் பல சிக்கல் இருந்து தாமதமானதால், மகிழ்திருமேனி தனது கதையே பண்ணலாம் என்று முடிவு செய்துள்ளார்.
ஸ்கிரிட் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்று சொல்லப்படுகிறது. அனேகமாக மே மாதம் அஜித்தின் பிறந்த நாள் அன்று ஸ்பெஷலான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல மே மாதம் படப்பிடிப்பு தொடங்கவும் வாய்ப்பு உள்ளது. இதற்காக அஜித் வேல்ட் டூரை தள்ளிவைத்துவிட்டு இந்த படத்திற்காக காத்திருக்கிறார். இதனால், நிச்சயமாக மே மாதம் அஜித் 62 படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்றார் வலைப்பேச்சு பிஸ்மி.
Listen News!