• Sep 20 2024

ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியிடுவதில் லைகா நிறுவனம் எடுத்த முடிவு- அடக் கடவுளே - ரசிகர்கள் பாவமில்லையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அஜித்.

 ஏகே 62 திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே துவங்குவதாக இருந்தது.முதலில் விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை இயக்க இருந்த நிலையில் கதையில் மாற்றம் செய்வது தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக விக்னேஷ் சிவன் விலகிவிட்டார்.


 அதனை தொடர்ந்து மகிழ் திருமேனி தான் AK 62 படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக AK 62 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.


கதையை இறுதி செய்யும் பணிகளில் மகிழ் திருமேனி தற்போது பிஸியாக ஈடுபட்டு வருகிறாராம். முன்பு ஏற்பட்டது போல மீண்டும் ஆகிவிட கூடாது என்பதால் லைகா நிறுவனம் தற்போது அறிவிப்பை வெளியிட அவசரம் காட்டவில்லை என சினிமா வட்டாரத்தினர் கூறி இருக்கின்றனர். 


Advertisement

Advertisement