விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடத்தி முடித்த படக்குழு தற்போது அடுத்தகட்ட ஷூட்டிங்கை காஷ்மீரில் நடத்தி வருகின்றனர். இதற்காக தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு பறந்த படக்குழு, அங்கு முழுவீச்சில் ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் படப்பிடிப்பை அங்கு நடத்திவிட்டு இந்த மாத இறுதியில் மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளனர்.
மாஸ்டர் படத்தை போலவே லியோ படத்தில் விஜய்யின் ஹேர் ஸ்டைலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளது. அத்தோடு முக்கியமாக இந்த படத்தில் விஜய்யை வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக 30க்கும் மேற்பட்ட ஹேர்ஸ்டைலை தயார் செய்து அதில் ஒன்றை தேர்வு செய்து தற்போது நடிக்க வைத்து வருகிறார் லோகேஷ். இந்த ஹேர் ஸ்டைல் விஜய்யையும் கவர்ந்து உள்ளதாம்.
Listen News!