• Nov 19 2024

உலகளவில் வெளியான 'Killers Of The Flower Moon' படத்தின் வசூலை முறையடித்த லியோ! அமெரிக்க ஊடகமும் உறுதி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் லியோ படம் தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில்  முன்வைக்கப்பட்டு தான் வருகின்றது. ஆனாலும், லியோ படம் வெளியாகிய நான்கு நாட்களுக்குள் வசூலை வாரிக்குவித்துள்ளது.

இந்த நிலையில், லியோனார் டோ டிகாப்ரியோ நடித்துள்ள ‘Killers Of The Flower Moon’ படத்தின் வசூலை 'லியோ' திரைப்படம் நான்கு நாட்களில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, ராபர்ட் டி நிரோ நடித்துள்ள படம்  'Killers Of The Flower Moon’. குறித்த படம். 2017ஆம் ஆண்டு அதே பெயரில் டேவிட் கிரென் என்பவர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 20ஆம் திகதி பல்வேறு நாடுகளில் வெளியானது. எனினும் இந்தியாவில் வரும் 27ஆம் திகதி வெளியாகிறது.

குறித்த படம் உலகளவில்  44 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இப்படத்தின் வசூலை விட விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் அதிக வசூலை வரிக்குவித்து முந்தியுள்ளது. 


இது தொடர்பிலான புள்ளிவிவரங்களை வெளியிடும் காம்ஸ்கோர் தளம் இதனை தெரிவித்துள்ளது. அத்துடன், இதனை முன்னணி அமெரிக்க ஊடகமான வெரைட்டி தளமும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement