லியோ திரைப்படம் இளையதளபதி விஜய் அவர்களின் நடிப்பில் இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கிறது. லியோ ஆடியோ லஞ்ச் விழா குறித்து நடிகர் விஜய் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அந்த வகையில் லியோ ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றிருக்கிறது.
நடிகர் விஜய் எப்போதுமே தனது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக செய்ய விருப்பப்படுவார். ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டத்தோடு ரசிகர்களுக்கான அறிவுரை என பல சிறப்பு அம்சங்கள் இடம்பெறும்.அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் இறங்குவதற்கான வேலைகளையும் செய்து வருகிறார்.
ஆகையால் இதைப் பற்றிய விஷயங்களை லியோ மேடையில் விஜய் பேசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேலும் சமீபத்தில் ஏ ஆர் ரகுமானின் "மறக்குமா நெஞ்சம் " இசை கச்சேரியில் பல பிரச்சினைகள் நடைபெற்றது. அது போல் லியோ நிகழ்ச்சியில் நடந்து விடக்கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடு போடப்பட்டிருக்கிறது.
அதாவது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு மாவட்டம் வாரியாக 200 டிக்கெட்டுகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஜவான் , ஜெயிலர் படத்தின் பின்பு அனைவரின் பார்வையும் லியோ திரைப்படத்தின் மீதுதான் உள்ளது. ஆகவே அனேகமான ரசிகர்கள் ,பார்வையாளர்கள் வருகை தருவார்கள். இதனாலே விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே பேனர்கள் வைக்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரசிகர்கள் தங்களது சொந்த வாகனத்தில் வந்து பொது மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆடியோ லஞ்ச் நாட்கள் நெருங்கவே ஏதும் அசம்பாவிதம் நடந்துவிட கூடாது என்று தளபதிக்கு நாளுக்கு நாள் பயம் அதிகரிப்பதால் இவ்வாறான கட்டுப்பாடுகள் பலமாக்கப்பட்டு வருகிறது.
Listen News!