லாேகஷே் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் தான் லியோ. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது தற்போது விஜய் ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்நிலையில் லியோ திரைப்பட இசை வெளியீட்டு விழா ரத்து செய்ப்பட்டதற்கு அரசியல் அழுத்தமே காரணம் என ரசிகர்கள் மத்தியில் தகவல்கள் வெளியாகி பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் அரசியல் அழுத்தம் காரணம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்தாலும், தற்போது இணையத்தில் அது பற்றி ரசிகர்கள் மத்தியில் விவாதம் வெடித்து இருக்கிறது.
இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் போட்டிருக்கும் ட்விட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அவர் குறிப்பிட்டிருப்பதாவது லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு வெறும் 6000 பேர் வரலாம் என்று மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு அதிக கூட்டம் வந்து எதாவது அசம்பாவிதம் நடக்கும். அதனால் படக்குழுவுக்கு கெட்ட பெயர் வந்திருக்கும். அதனால் விழாவை ரத்து செய்தது விவேகமான முடிவு என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
Listen News!