வாரிசு படத்துக்கு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் படத்தில் நடித்து வருகின்றார். ஏராளமான நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது தற்பொழுது சென்னையில் இடம் பெற்று வருகின்றது.விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் இப்படத்தை இயக்குவதால் படம் சூப்பர் ஹிட்டாகும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து செதுக்கிவருவதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.லியோ படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து அந்தப் படத்தின் கதை என்ன, அது எல்சியூ எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருமா போன்ற எக்கச்சக்க கேள்விகளை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
ஆனால் அதுகுறித்து எந்தவிதமான தகவலையும் கசியவிடாமல் படக்குழு பாதுகாத்துவருகிறது. இந்தச் சூழலில் முதல் சிங்கிளுக்கான அறிவிப்பு போஸ்டரில் ஆல்டர் ஈகோ என்ற வார்த்தை கவனம் ஈர்த்துள்ளது.
ஏற்கனவே லியோ படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதாவது ஒரு சம்பவத்தை செய்துவிட்டு வேறு ஒரு நபராக காஷ்மீரில் விஜய் வாழ்வார். அவரது இருப்பிடத்தை தெரிந்துகொண்டு எதிரிகள் அங்கு வருவார்கள் என கூறப்பட்டது. இப்போது ஆல்டர் ஈகோ என்ற வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறதென்று கூறுகிறார்கள் ரசிகர்கள். ஏனெனில் ஆல்டர் ஈகோ என்றால் ஒரு விஷயத்தை செய்துவிட்டு தன்னுடைய அடையாளங்களை மறைத்து இன்னொருவராக வாழ்வது என்று அர்த்தம்.
இந்நிலையில் படத்துக்கு இசையமைத்திருக்கும் அனிருத் லியோ குறித்து பேசியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. அதன்படி, லியோ ப்ளடி ஸ்வீட் படத்தின் காஷ்மீர் காட்சிகளை பார்த்த அவர், 'இந்தப் படம் எந்த லெவலுக்கு போகும்னு தெரியாது. அந்த மாதிரி இருக்கும். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு எவ்வளவு பெரிய ப்ளாக் பஸ்டர் ஆகும் என்று யோசிக்கலாம். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது' என படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கூறியதாக சொல்லப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!