விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி கடந்த 19ஆம் திகதி கோலாகலமாக வெளியானது. இதை தொடர்ந்து அதற்கான வசூல் வேட்டையும் உச்சத்தை கண்டுள்ளது.
லியோ படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏராளமானவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் லியோ படம் இதுவரையில் திரையிடப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில், லியோவின் படக்குழுவினர் நவம்பர் 1-ம் திகதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட வெற்றி சந்திப்பை நடத்த திட்டமிட்டது.
குறித்த நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி படக்குழுவினர் பெரியமேடு காவல்துறையை அணுகி, இது தொடர்பில் அனுமதி கடிதம் ஒன்றையும் லியோ திரைப்பட குழுவினர் உள்விளையாட்டு அரங்க அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
எனினும், நேரு உள்விளையாட்டு அரங்கம் வைத்துள்ள சட்டம் என்னவென்றால் சுமார் பத்து நாட்களுக்கு முன்பாக கடிதம் அனுப்பி அதற்கான அனுமதியை பெற வேண்டும் என்பது தான். இதனால் குறித்த நிகழ்வை பரிசீலனை செய்வதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது சென்னையில் அடுத்தமாதம் 1ம் திகதி நடக்கவிருக்கும் விஜய்யின் லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு போலீசார் நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளனர்.
அதன்படி, ஏமாற்றமடைந்த ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அதே நேரு உள்விளையாட்டு அரங்கில், லியோ படத்தின் வெற்றி விழாவை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், படக்குழு அனுப்பிய கடிதத்திற்கு போலீஸ் தரப்பில் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் ‛விழா எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும், எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படம்? முக்கிய விருந்தினர்கள் யார் யார்? ' என பல கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன், குறித்த விழாவுக்கு 5000 பேர் மட்டுமே இருக்க வேண்டும். 200 - 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பஸ்ஸில் வர அனுமதி கிடையாது. மேலும், இருக்கைளுக்கு ஏற்றபடி ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதேவேளை, கடும் நிபந்தனைகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் லியோ பட வெற்றி விழாவுக்கு தற்போது போலீசார் அனுமதி வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!