விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி கடந்த 19ஆம் திகதி கோலாகலமாக வெளியானது. இதை தொடர்ந்து அதற்கான வசூல் வேட்டையும் உச்சத்தை கண்டுள்ளது.
லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி மற்றும் பல வலிமையான முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
லியோ படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏராளமானவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் லியோ படம் இதுவரையில் திரையிடப்பட்டு வருகின்றது.
அத்துடன், லியோ திரைப்படம் மிக வேகமாக ஐநூறு கோடி கிளப்பில் நுழைந்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி, ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் அதன் முழு வசூல் சாதனையே மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில், லியோவின் படக்குழுவினர் நவம்பர் 1-ம் திகதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட வெற்றி சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.
குறித்த நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி படக்குழுவினர் பெரியமேடு காவல்துறையை அணுகியுள்ளது. இது தொடர்பில் இன்றைய தினம் அனுமதி கடிதம் ஒன்றையும், லியோ திரைப்பட குழுவினர் உள்விளையாட்டு அரங்க அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
அதேவேளை, நேரு உள்விளையாட்டு அரங்கம் வைத்துள்ள சட்டம் என்னவென்றால் சுமார் பத்து நாட்களுக்கு முன்பாக கடிதம் அனுப்பி அதற்கான அனுமதியை பெற வேண்டும் என்பது தான்.
அதன்படி, குறித்த விழா நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் பட குழு கடிதத்தை அனுப்பியதால், இதற்கு அனுமதி கொடுப்பதா? இல்லையா? என நேரு உள் விளையாட்டு அரங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த நிகழ்ச்சி இறுதி செய்யப்பட்டால் விஜய்யும் அதில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!