இளைய தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகிய நிலையில், 'லியோ திரைப்படம் ஜெயிலர் வசூலை முறியடித்தால் மீசையை எடுத்துக் கொள்கிறேன்' என பரபரப்பு பேட்டியளித்திருந்தார் மீசை ராஜேந்திரன்.
எனினும், நேற்றிரவு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது நிலைப்பாட்டை அப்படியே மாற்றி பேசியுள்ளார்.
'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர்.
லியோ படத்தை திரையரங்குகளில் பார்த்துவரும் ரசிகர்கள் செம்மையாக படம் உள்ளதென என்ஜாயாய் சொல்லி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 850க்கும் மேற்பட்ட திரைகளில் லியோ படம் வெளியாகி இருக்கிறது.
இப்படம் முதல் நாளிலேயே ரூ148 கோடிக்கு மேல் உலகளவில் வசூலை வாரிக்குவித்து உள்ளதாக தகவல்கள் வந்தது. அதன்படி இரண்டாம் நாள் வசூல் விவரம் ரூ200 கோடியென கணிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், 'லியோ திரைப்படம் ஜெயிலர் வசூலை முறியடித்தால் மீசையை எடுத்துக் கொள்கிறேன்' எனக்கூறிய மீசை ராஜேந்திரன், தற்போது 'நடிகர் விஜய்யே வந்து லியோ 800 கோடி வசூலை முந்தி விட்டது என சொன்னால் மட்டுமே என்னோட மீசையை எடுக்கிறேன்' என தோல்வி பயத்தில் மாற்றி மாற்றி பேசி வருகிறார்.
Listen News!