• Sep 21 2024

லியோவில் வெறும் ஆக்‌ஷன் கிங் இல்லை- நடிகர் அர்ஜுன் கொடுத்த சீக்ரெட் கோர்ட்வேர்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67 டைட்டில் லியோ என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேபோல், லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியானது.

அதன்படி இந்தப் படத்தில் விஜய் தவிர்த்து த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், ஜார்ஜ் மரியன், டான்ஸர் வசந்தி நடிப்பது உறுதியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர்  முதன்முறையாக விஜய்யுடன் நடிக்கின்றனர்.


இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்க பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் லியோ படத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் ,'லியோ திரைப்படத்தின் கதை மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது".

"இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை வித்தியாசமான ஆக்‌ஷன் தோற்றத்தில் காட்டப்போகிறார். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். அவருடன் சேர்ந்து நடிப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது" எப்போதும் போல வெறும் ஆக்‌ஷன் கிங்காக மட்டும் இல்லாமல் இன்னும் தரமாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.


அர்ஜுனின் இந்த ஸ்டேட்மெண்ட் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை தாறுமாறாக எதிர்பார்க்க வைத்துள்ளது. ஏற்கனவே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் லியோ படத்தின் ஒன்லைனை கேட்டு மிரண்டு விட்டேன் என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement