விஜய்யின் லியோ திரைப்படம் நாளை திரையில் வெளியாகவுள்ளது. கடந்த ஒரு வருடமாக இப்படத்தை தான் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர்.
இந்நிலையில் லியோ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் திண்டாடி வருகின்றனர் .பெரும்பாலான ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு லியோ படம் பார்க்க படையெடுக்கின்றனர். தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் லியோ காட்சி துவங்குகின்றது. ஆனால் அண்டை மாநிலங்களில் லியோ படத்திற்கு அதிகாலை காட்சி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே தான் முதல் காட்சியையே பார்க்கவேண்டும் என ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் லியோ படத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது ரோகினி தியோட்டரில் ரசிகர்கள் அலைமோதி வழிகின்றனர். ரசிகர்களை கட்டுப்படுத்த பாெலிஸார் சிறப்பு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை பார்க்கும் போது நாளை படம் செம மாஸ்ஸாகத்தான் இருக்கப் போகின்றது.
Listen News!