லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ. இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லியோ திரைப்படம் வருகிற 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தமிழ் நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ளனர். இது லியோ படத்தின் வருகைக்கான முன் அறிவிப்பு என ரசிகர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு ஆதரவினை வழங்கி வருகின்றனர்.
Listen News!