லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் நாளைய தினம் வெளியாக உள்ளது.
லியோ படத்தின் வருகையை ரசிகர்கள் வெடி கொழுத்தி கொண்டாடி வருகின்றார்கள் இந்நிலையில் இப்படம் LCU இல் இல்லையா? இருக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் இது பற்றி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது லியோ திரைப்படம் LCU இல் இல்லையா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியும் எனவும், தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்தும், இந்த படத்தில் பயணித்த படக்குழு ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்தும்,லியோ படத்துக்கு ஆதரவு வழங்கிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தும் கூறியுள்ளார்.
Listen News!