விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த வாரம் முதல் உலகெங்கும் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், 7வது நாளான நேற்று வார நாட்களில் லியோ படம் பாக்ஸ் ஆபிஸில் எந்தளவுக்கு சறுக்கியது, அதன் மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
லியோ திரைப்படம் 7 நாட்களில் 500 கோடி வசூலை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை லலித் குமார் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார். லியோ திரைப்படம் இதுவரை 516 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், இன்னமும் 500 கோடி லியோ தொடவில்லை என்றும் தொட்டிருந்தால் தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்து இருக்குமே என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்தியாவில் லியோ திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் 150 கோடி வசூல் வரை பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.
திங்கட்கிழமை ஆயுத பூஜை, செவ்வாய்க்கிழமை விஜயதசமி என பண்டிகை நாட்கள் தமிழ்நாட்டில் இருந்த நிலையில், லியோ படம் இங்கே நல்ல வசூலை ஈட்டியுள்ளது. ஆனால், வார நாட்களில் மற்ற இடங்களில் லியோ படத்தின் வசூல் அதிரடியாக குறைந்து விட்டது.
வியாழக்கிழமையான இன்றும் வெள்ளிக்கிழமையான நாளையும் மேலும் லியோ வசூல் பாதிக்கும் என்றும் மீண்டும் இந்த வார விடுமுறையில் லியோ படம் வசூல் வேட்டை நடத்தினால் தான் 600 கோடி வசூல் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!