லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ படத்தில் நடித்து வருகின்றார்.அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இபபடத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப் படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.
காஷ்மீரில் நடந்த ஷூட்டிங் தொடர்பாக லியோ படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வழக்கமான மேக்கிங் வீடியோவாக இல்லாமல், படத்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்கள் சம்பந்தமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது ஒட்டுமொத்த கோலிவுட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு சில வாரங்கள் மும்முரமாக படப்பிடிப்பினை நடத்தி வந்தனர்.அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பையனூரில் ஷுட்டிங் நடந்தது. அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு இப்போது ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்துவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு பாடலுக்கான ஷூட்டிங் சென்னை ஆதித்யராம் ஸ்டூடியோவில் நாளை தொடங்கவிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஷூட்டிங் இரண்டிலிருந்து மூன்று நாள்கள்வரை நடைபெறலாம் என்றும் கருதப்படுகிறது. இதனையொட்டி ஸ்டூடியோவில் பிரமாண்ட ஸ்டூடியோ போடப்பட்டிருப்பதாகவும் படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது
இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் பெரிதாக பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் என்ற முத்திரை இருக்கிறது. அதை லியோ மூலம் அவர் உடைக்கவிருக்கிறார். படத்தின் ஒரு பாடலுக்கு 2000 டான்ஸர்கள் பயன்படுத்தப்படவிருக்கிறார்கள் என்ற செய்தி உலாவி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படி இருக்க நாளை பாடல் ஷூட்டிங் என கூறப்படுவதால், ஒருவேளை அந்தப் பாடலின் ஷூட்டிங்தான் நடக்கவிருக்கிறதோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
Listen News!