• Sep 20 2024

லியோ திரைப்படம் கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் வசூலை எட்டும்- பிரபல பத்திரிகையாளர் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில்  விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

கடந்த ஆண்டில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது.அதே போல லியோ படமும் ஹிட்டடிக்கும் என்று நம்பப்படுகின்றது. சமீபத்தில் லண்டனில் இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங்குகள் துவங்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.


இந்நிலையில் கண்டிப்பாக இந்தப் படம் சிறப்பான ப்ரமோஷன்களை மேற்கொள்வதால் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை மேற்கொள்ளும் என்று சினிமாவின் மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு உறுதி தெரிவித்துள்ளார். 

 வெளிநாட்டில் வாரிசு படத்துடன் ஒப்பிடுகையில் லியோ படத்தின் வெளியீட்டு உரிமை 3 மடங்கு அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது. அதனால் வெளிநாடுகளில் பேமிலி ஆடியன்சை அதிகமாக கவரும் வகையில் பல ப்ரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர். துபாயின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இந்தப் படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளிலும் நடக்கவுள்ள ப்ரமோஷன்களில் விஜய் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement