• Sep 21 2024

leo இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்துவதில் ஏற்பட்ட புதிய சிக்கல்- குழப்பத்தில் லியோ படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் லியோ.நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். பட்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.

 சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் பிறந்தநாட்களையொட்டி அவர்களின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியாகி மாஸ் காட்டியது. இதே போல விஜய்யின் பிறந்தநாளில் நா ரெடி தான் என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இருப்பினும் பல சர்ச்சைகளையும் இப்பாடல் சந்தித்தது.


படத்தின் இசை வெளியீடு வரும் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் 5ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இருப்பினும் அக்டோபர் 9ம் தேதி சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி அந்த மேடையில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் முன்னதாக மேடை அலங்காரம் உள்ளிட்ட பணிகளுக்காக 4 நாட்களுக்கு முன்னதாகவே அந்த மேடையை புக் செய்துள்ளதால், விஜய்யின் லியோ இசை வெளியீடு 5ம் தேதி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மலேசியாவில் ஓபன் கிரவுண்டில் இந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும் படக்குழுவினர் திட்டமிட்ட நிலையில், அங்கு அடிக்கடி மழை பெய்து வருவதால் இதில் சரியான முடிவை எடுக்க முடியாமல் லியோ டீம் குழப்பத்தில் உள்ளதாம்.இதனால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement