• Sep 20 2024

LEO படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள தேதி அறிவிச்சாச்சு- அப்போ சென்னையில் இல்லையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் முடிவடைந்தது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.வருகிற அக்டோபர் மாதம் வெளிவரவிருக்கும் இப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட் வெளியாகிக்கொண்டே தான் இருக்கிறது.


மேலும் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியான இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பினாலும் பல சர்ச்சைகளையும் சந்தித்தது. அத்தோடு அண்மையில் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாப்பாத்திரம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் மாதம் 5ம்தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement