• Sep 20 2024

லியோ - இரண்டாம் பாதி சொதப்பல்! ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தோல்வியா? குவியும் நெகட்டிவ் விமர்சனங்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி போடப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவில் 3.50க்கு லியோ படத்தின் முதல் காட்சி பெருமளவில் திரையிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் LCU இல்  இணைந்துள்ளது. 


'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் லியோ படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், காலையில் இருந்தே தியேட்டர்களில் ரசிகர்கள் கச்சேரியை ஆரம்பித்துள்ளனர். 

இந்த நிலையில், லியோ படத்தின் முதலாம் பாதி ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சூப்பராக இருந்ததாக தெரிவிக்கும் ரசிகர்கள் இரண்டாம் பாதியை லோகேஷ் கனகராஜ் சொதப்பி விட்டார் என தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement