விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 19ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லியோ. இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் பெரும் ரெஸ்பான்ஸை அள்ளியிருக்கிறது.
முதல் வாரத்தின் முடிவில் 460 கோடி ரூபாயை லியோ வசூலித்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. கண்டிப்பாக லியோ படம் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை அசால்ட்டாக முறியடித்துவிடும் என்று கூறிவருகிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்களோ லியோ படக்குழு ஃபேக்காக ஒரு கலெக்ஷன் ரிப்போர்ட்டை சொல்கிறது என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
அதேபோல் தமிழ்நாடு திரையரங்க சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் அளித்த ஒரு பேட்டியில், லியோ படத்தை உருவாக்குவதற்கு லலித்குமார் என்னிடம்தான் வட்டிக்கு பணம் வாங்கினார். காஷ்மீரில் இருந்தபடி லியோ பட ஷூட்டிங்கிற்காக இரண்டரை கோடி ரூபாய் பணம் வேண்டுமென கேட்டார். அதனையடுத்து 24 சதவீத வட்டிக்கு பணம் கொடுத்தேன் என்றார். மேலும் லியோ படத்தால் எந்த லாபமும் இல்லை என்றும் ஒரே போடாக போட்டார்.
இந்நிலையில் லியோ கலெக்ஷன் ரிப்போர்ட் ஃபேக் என்று எழுந்திருக்கும் கருத்துக்கு தயாரிப்பாளர் லலித்குமார் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், "லியோ படத்தின் வசூலில் பொய் சொல்ல வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. உண்மையான வசூலைத்தான் நான் அறிவித்திருக்கிறேன்.
தமிழ்நாட்டி ஐமேக்ஸில் மூன்று திரையரங்குகள்தான் இருக்கின்றன. ஆனால் உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அவைகளை தமிழ் தயாரிப்பாளர்கள் டார்கெட் செய்ய வேண்டும். அவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே கன்டென்ட்டை கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியும். லியோ திரைப்படம் ஐமேக்ஸில் மட்டும் 40 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. அது மிகப்பெரிய தொகை" என்றார்.
Listen News!