விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த வாரம் முதல் உலகெங்கும் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் புக் மை ஷோவில் ஜெயிலர் படத்தை விட அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக அதன் நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனபடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் புக் மை ஷோவில் அதிகபட்சமாக 6 மில்லியன் டிக்கெட்கள் விற்பனை செய்து சாதனை படைத்து.
இவ்வாறான நிலையில், ஜெயிலர் பட சாதனையை லியோ முறியடித்து அதிகபட்சமாக 7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக புக்மைஷோவின் நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சக்சேனா கூறியுள்ளார்.
லியோ டிசாஸ்டர் என படம் வெளியாகிய நாளில் இருந்து அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட்களை செய்து வந்த நிலையிலும், புக் மை ஷோ, இங்கிலாந்தில் லியோ படத்தை வாங்கி வெளியிட்ட அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட், காசி தியேட்டர், ரோகினி தியேட்டர் என பல ஆதாரப்பூர்வ அறிவிப்புகள் லியோ படத்தின் வசூல் குறித்து வெளியாகி வரும் நிலையில், லியோ படத்தின் உண்மையான வசூலை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடித்தால், லியோவில் கிடைத்த வசூலை விட தலைவர் 170 அல்லது தலைவர் 171 நிச்சயம் முறையடிப்பார் என சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!