• Sep 20 2024

உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் லியோ! வெளிநாட்டிலும் அமோக வரவேற்பாம்! வெளியானது முழுவிபரம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகிய நிலையில், அதன் முதல் நாள் வசூல் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 

லியோ படத்தை திரையரங்குகளில் பார்த்துவரும் ரசிகர்கள் செம்மையாக படம் உள்ளதென என்ஜாயாய் சொல்லி வருகின்றனர். 

இந்நிலையில், லியோ படத்தின் முதல் நாள் மட்டுமே உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் இதுவரை எந்தவொரு திரைப்படமும் முதல் நாளில் ரூ. 120 கோடி வரை வசூல் செய்தது கிடையாது. தளபதியின் லியோ திரைப்படம் தான் அந்த வசூல் சாதனையை முதல் முறையாக முறியடித்துள்ளது.


தமிழகத்தில் மட்டும் சுமார் 850க்கும் மேற்பட்ட திரைகளில் லியோ படம் வெளியாகி இருக்கிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் - ரூ.32 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்   ரூ.15 கோடியும்,  கர்நாடகாவில் ரூ.13 கோடி வரையிலும் வசூல் கிடைத்துள்ளதாம். 

அத்துடன், கேரளாவில் ரூ.11 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளதோடு,  இந்தியாவின் இதர மாநிலங்களில் ரூ.3 கோடி வரையில் வசூலித்துள்ளது லியோ.

இதேவேளை, லியோ படம்  வெளிநாடுகளில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement