• Sep 19 2024

இரண்டாம் நாளே சரிந்த லியோவின் வசூல்..? உண்மையான முழுவிபரம் இதோ!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகிய நிலையில், அதன் இரண்டாம்  நாள் வசூல் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 

லியோ படத்தை திரையரங்குகளில் பார்த்துவரும் ரசிகர்கள் செம்மையாக படம் உள்ளதென என்ஜாயாய் சொல்லி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 850க்கும் மேற்பட்ட திரைகளில் லியோ படம் வெளியாகி இருக்கிறது.


இப்படம் முதல் நாளிலேயே ரூ148 கோடிக்கு மேல் உலகளவில் வசூலை வாரிக்குவித்து உள்ளதாக தகவல்கள் வந்தது..இந்நிலையில் இரண்டாம் நாள் வசூல் விவரம் வந்துள்ளது.

அதன்படி, தமிழில் ரூ48.96 கோடி, தெலுங்கில் ரூ12.9 கோடியும், இந்தியில் ரூ2.8 கோடியும், கன்னடம் ரூ 14 கோடி வசூலாகி உள்ளதாகவும், இந்தியா அளவில் ரூ 36 கோடியை அள்ளி இத்திரைப்படம், உலகஅளவில் ரூ. 100.80 கோடி வசூலை பெற்று இரண்டாம் நாளிலேயே ரூ200கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.


Advertisement

Advertisement