தமிழ் சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய இயக்குநராகத் திகழ்ந்து வந்தவர் லோகேஷ் கனகராஜ். அந்தவகையில் 2017 ஆம் ஆண்டு தொடங்கிய அவரின் சினிமா பயணம் இந்த 6 வருடத்தில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது என்றே சொல்லலாம்.
பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்த இவர் தற்போது விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் அர்ஜூன்,சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன் என தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த பிரபலங்கள் பலரை இணைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 36-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு லியோ படத்தின் வில்லன் நடிகர் சஞ்சய் தத் சூப்பர் புகைப்படம் ஒன்றினைப் பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Happy birthday my brother, son, family @Dir_Lokesh, may God give you more success, peace, happiness and wealth, I am always with you for life, stay blessed. Love you! pic.twitter.com/9OW5Cj4pZo
இந்த பதிவில் "என்னுடைய சகோதரனே, மகனே மற்றும் என் குடும்பத்தில் ஒருவர் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!