விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய கனா காணும் கலங்கள் என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ராஜு இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இருப்பினும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பலந்து கொண்டதன் மூலமே மிகவும் பிரபல்யமானார்.
பிக்பாஸில் கலந்து கொண்ட இவர் டைட்டில் வின்னராகவும் தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜு வீட்டில பார்ட்ரி என்னும் காமெடி ஷோவையும் நடத்தி வருகின்றார்.
இது தவிர பிபி ஜோடிகள் நிகழ்ச்சியையும் ப்ரியங்காவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். இதன் பைனல் நிகழ்ச்சி கடந்த வாரம் தான் முடிவுக்கு வந்தது.
அந்த ஷோவுக்கு பிரம்மாஸ்திரா படத்தை ப்ரோமோட் செய்ய ரன்பீர் கபூர், நாகர்ஜுனா மற்றும் ராஜமௌலி ஆகியோர் வந்தனர்.அப்போது ராஜு ரன்பீருக்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருக்கும் ஸ்லாங்குகள் பற்றி சொன்னார். 'சென்னை ஹாட் ஆன இடம், எல்லோரும் எப்போது இரிடேட்டட் ஆகவே இருப்பாங்க' , 'மதுரை ஒரு ஹை place, எப்போதும் பாதையிலே இருப்பாங்க' என ராஜு கூறினார்.
சென்னை மக்கள் இரிடேட்டிங்கா?அப்புறம் நீரு எதுக்கு சென்னை வந்தீரு, pic.twitter.com/IW9GGhkzl9
தமிழ்நாட்டை பற்றி இவ்வளவு கேவலமாக யாரும் ஒரு ஹிந்தி நடிகருக்கு அறிமுகம் செய்ய முடியாது என அதிகம் பேர் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் ராஜு ட்விட்டரில் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
"திரு.ரன்பீர் கபூர் அவர்களுக்கு சென்னை வட்டார வழக்கை நகைச்சுவையாக சொல்லிக்குடுக்கும் காணொளிக்கு சென்னை மக்களை இழிவாக பேசினேன் என விமர்சனம் எழுவதை படித்தேன். நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறியதற்க்காக வருந்துகிறேன்… இரிடேட் ஆகவேண்டாம், மன்னிக்கவும்🙏🏻#Madras" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Listen News!