• Sep 20 2024

ஜாலி பண்ண இங்க தான் போகப் போறோம்- ஹனிமூன் கொண்டாட சூப்பர் பிளான் போட்டிருக்கும் ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி

stella / 2 years ago

Advertisement

Listen News!

லிப்ரா புரடக்‌ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர்.இவர் பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமியை அண்மையில் திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் தான் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகின்றது.

இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாக இருந்தாலும் ரவீந்தரின் உடல் தோற்றத்தை வைத்து ட்ரோல் செய்வதோடு மகாலட்சுமி பணத்துக்காகத் தான் ரவீந்திரனை திருமணம் செய்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.இருப்பினும் இதனை பொருட்படுத்தாது சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். 


மேலும் புதிதாக கல்யாணம் ஆன ஜோடிகள் ஹனிமூன் செல்வது வழக்கம். அதுவும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டால் அவர் வெளிநாட்டில் ஹனிமூன் கொண்டாடுவார்கள், சமீபத்தில் விக்கி - நயன் ஜோடி கூட தாய்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஹனிமூன் கொண்டாடினர். இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடியும் எங்கு ஹனிமூன் செல்ல உள்ளார்கள் என்பதை சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளனர்.


அதன்படி அவர்கள் இருவரும் ஐரோப்பா அல்லது லண்டனில் ஹனிமூன் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதுவும் இப்போது இல்லையாம் நவம்பர் மாதத்தில் தானாம். அதற்கு முன் அடுத்த மாதம் தல தீபாவளி வருவதால் அதனை ஜம்முனு கொண்டாடிவிட்டு ஜாலியாக இருவரும் ஹனிமூன் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement