• Sep 20 2024

ஐஷூக்கு குழந்தை பிறந்த சந்தோசமா..? நம்ம 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் எப்படி ஆடுறாங்க பாருங்க..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்களிடையே பிரபலமாக பேசப்படும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். மளிகை கடை வைத்து நடத்தி வரும் அண்ணன் தம்பி நால்வரின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இத்தொடர் அமைந்திருந்தது.


தற்போது அதிரடித் திருப்பங்களுடன் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. அதனால் ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோசமாக இருக்கின்றனர். இங்கு மூத்த மருமகளாகவும், அண்ணியாகவும் வரும் தனத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு நடிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வத்தை அதில் வெளிப்படுத்தி இருப்பார் நடிகை சுஜிதா. 


இவர் சீரியலில் எந்தளவிற்கு ஆர்வமாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். இந்நிலையில் தற்போது இவர் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "ஐஷுக்கு குழந்தை பிறந்த சந்தோசமா.." எனக்கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement